தனஞ்ஜெயா பந்துவீச பச்சை கொடி காட்டியது ஐ.சி.சி !! 1
Cricket - Sri Lanka vs England- Sri Lanka Practice Session - Dambulla, Sri Lanka - October 12, 2018. Sri Lanka's Akila Dananjaya bowls during a practice session ahead of their second One Day International cricket match with England. REUTERS/Dinuka Liyanawatte

தனஞ்ஜெயா பந்துவீச பச்சை கொடி காட்டியது ஐ.சி.சி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா, சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு ஐ.சி.சி., அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின்போது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் சர்வதேச போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது.

தனஞ்ஜெயா பந்துவீச பச்சை கொடி காட்டியது ஐ.சி.சி !! 2

மேலும் அவர் தனது பந்து வீச்சு முறையை மாற்றி நிரூபிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவரது பந்து வீச்சு சென்னையில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் அறிக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) கொடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஐசிசி தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அனுமதி அளித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு;

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதன்பின் மார்ச் 3-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

தனஞ்ஜெயா பந்துவீச பச்சை கொடி காட்டியது ஐ.சி.சி !! 3
Cricket – Sri Lanka vs England- Sri Lanka Practice Session – Dambulla, Sri Lanka – October 12, 2018. Sri Lanka’s Akila Dananjaya bowls during a practice session ahead of their second One Day International cricket match with England. REUTERS/Dinuka Liyanawatte

 

இதற்கான மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கான தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

  1. மலிங்கா பெர்னாண்டோ 3. தரங்கா 4. டிக்வெல்லா 5. குசால் பெரேரா 6. குசால் மெண்டிஸ் 7. டி சில்வா 8. திசாரா பெரேரா 9. தனஞ்செயா 10. ஏ. பெரேரா 11. ஓ பெர்னாண்டோ 12. கே. மெண்டிஸ் 13. உடானா 14. வி. பெர்னாண்டோ 15. கே. ரஜிதா 16. சண்டகன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *