சண்டக்கோழி வார்னருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி., david-warner-fined-75-per-cent-of-match-fee

டி.காக்குடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னரக்கு ஐ.சி.சி., அபராதம் விதித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது, இதில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

 

போட்டியின் போது மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் வார்னரை டி.காக் எதோ சொல்ல, அதனால் ஆத்திரமடைந்த வார்னர் ரூமிற்கு செல்லும் வரையில் டி.காக்குடன் சண்டை போட்டார். அவரை பல முறை அடிக்கவும் முயன்றார் மற்ற வீரர்கள் வார்னரை தடுத்து நிறுத்தினர், இந்த வீடியோ கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி அது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து விசாரணை செய்த ஐ.சி.சி., வார்னரிடமும் விளக்கம் கேட்டது. வார்னரும் தனது ஒப்புக்கொண்டதால் வர்னரின் போட்டி சம்பளத்தில் இருந்து 75% அபராதமாக ஐ.சி.சி., விதித்துள்ளது. மேலும் அவருக்கு மூன்று டிகிரேட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

Cricket – Ashes test match – Australia v England – GABBA Ground, Brisbane, Australia, November 24, 2017. Australia’s David Warner reacts as he walks off the ground after being dismissed during the second day of the first Ashes cricket test match. REUTERS/David Gray

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ வார்னருக்கு போட்டி சம்பளத்தில், 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தவிர, மூன்று அபராத புள்ளிகள் வழங்கப்பட்டது,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வார்னர் நாளை துவங்கும் இரண்டாவது டெஸ்டில் விளையாடலாம். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டில் இன்னும் ஒரு அபராத புள்ளி கூடுதலாக பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். • SHARE

  விவரம் காண

  சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல் !!

  சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல் டி.20 அரங்கிற்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 12வது...

  முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன் !

  முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன் இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான...

  இறுதி போட்டியில் வெல்லப்போது யார்.. பழைய வரலாறுகள் சொல்வது என்ன..?

  இறுதி போட்டியில் வெல்லப்போது யார்.. பழைய வரலாறுகள் சொல்வது என்ன..? முத்தரப்பு டி.20 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான...

  முத்தரப்பு தொடரில் முடி சூடப்போவது யார்…? நாளை இறுதி போட்டி !

  முத்தரப்பு தொடரில் முடி சூடப்போவது யார்...? நாளை இறுதி போட்டி முத்தரப்பு டி.20 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான...

  இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை !!

  இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை முத்தரப்பு டி.20 தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய...