'அந்த பையன் மரண மாஸ் பன்றான்..' எதிரணி வீரரை மனமுவந்து பாராட்டிய டேவிட் வார்னர் 1

ஹெட்டிங்லே டெஸ்டில் ஜாப்ரா ஆர்சரின் பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது என வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. மழையால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. மழை பெய்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை பயன்படுத்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சர் புயல் வேகத்தில் பந்து வீசி விக்கெட்டுக்களை சாய்த்தார். அவரது பந்து வீச்சு வேகப்பந்து வீச்சு கண்காட்சி போன்று இருந்தது.

'அந்த பையன் மரண மாஸ் பன்றான்..' எதிரணி வீரரை மனமுவந்து பாராட்டிய டேவிட் வார்னர் 2

ஆர்சர் 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 ரன்னில் சுருண்டது. வார்னர் 61 ரன்களும், லாபஸ்சாக்னே 74 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

போட்டி முடிந்த பின்னர் டேவிட் வார்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வார்னர் கூறுகையில் ‘‘நம்பமுடியாத வகையில் இங்கிலாந்தின் பந்து வீச்சு இருந்தது. அவர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தனர்.

புதுப்பந்தில் ஜாப்ரா ஆர்சர் டேல் ஸ்டெயினை போன்று பந்து வீசுகிறார். அவர் சூழ்நிலையை சிறப்பான வகையில் பயன்படுத்த முயற்சி செய்கிறார். ஹெட்டிங்லேயில் அவரது பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது’’ என்றார்.

ஹெடிங்லீ டெஸ்ட்டில் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலிய அணி தன் வழக்கமான சரிவுப்பாதையைக் கண்டடைய உதவியவர் மால்கம் மார்ஷலின் 2ம் அவதாரமான ஜோப்ரா ஆர்ச்சரே. 136/2 என்ற நிலையிலிருந்து மார்ச் ஃபாஸ்ட் தொடங்க ஆஸ்திரேலியா 179 ரன்களுக்குச் சுருண்டது.'அந்த பையன் மரண மாஸ் பன்றான்..' எதிரணி வீரரை மனமுவந்து பாராட்டிய டேவிட் வார்னர் 3

ஜோப்ரா ஆர்ச்சர் 45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்து மீண்டும் ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் பார்முக்குத் திரும்பிய வார்னர் 61 ரன்களையும் ஸ்மித்திற்குப் பதிலாக ஆடும் லபுஷேன் 74 ரன்களையும் எடுத்தனர்.

மேகமூட்ட வானிலையில் பந்துகள் ஸ்விங் ஆக ஏகப்பட்ட பந்துகள் பேட்டைக் கடந்து சென்றது. டாஸ் வென்ற ஜோ ரூட் முதலில் ஆஸி.யை பேட் செய்ய அழைத்தார். அடிக்கடி மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு வெறுப்பேற்றிய தினத்தில் 25/2 என்ற நிலையிலிருந்து வார்னர், லபுஷேன் ஜோடி ஸ்கொரை 136 ரன்களுக்கு உயர்த்தியது, பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் புகுந்தார், ஆஸ்திரேலியாவுக்கு தங்களது சரிவு பாணியை நினைவூட்டினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *