வார்னருக்கு பதிலாக ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ் 1

ஆஸ்திரேலிய அணியின் தொடக்கவீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்கவீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். அவரது அடிப்படை விலை ரூபாய் 1 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி. சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் இவர் தான். ஐசிசி டி20 பட்டியலில் முதல் 10 இடத்தில் இருக்கும் ஒரே இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் தான்.

வார்னருக்கு பதிலாக ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ் 2
NOTTINGHAM, ENGLAND – SEPTEMBER 21: Alex Hales of England drives the ball towards the boundary during the 2nd Royal London One Day International between England and West Indies at Trent Bridge on September 21, 2017 in Nottingham, England. (Photo by Matthew Lewis/Getty Images)

நியூஸிலாந்து அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர நடுவரிசை வீரர் கேன் வில்லியம்சன்னை கேப்டனாக நியமித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தும் பிரச்சனையில் ஈடுபட்டதால், கேப்டன் பதவியில் இருந்து வார்னரை ஐதராபாத் அணி நீக்கியது.

வார்னருக்கு பதிலாக ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ் 3
Sunrisers Hyderabad captian David Warner hit the six during the final of the Vivo IPL 2016 ( Indian Premier League ) between The Royal Challengers Bangalore and the Sunrisers Hyderabad held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 29th May 2016
Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதை ஒப்பு கொண்டதால், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதனால், அவர்களால் ஐபில் தொடரிலும் பங்கேற்க முடியாது.

வார்னர் இல்லாதது கண்டிப்பாக ஐதராபாத் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். ஐதராபாத் அணிக்காக 59 இன்னிங்சில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 2579 ரன்கள் அடித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்த டேவிட் வார்னரை, 2018 ஐபில் தொடருக்காக அவரை தக்கவைத்து கொண்டது.

வார்னருக்கு பதிலாக ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ் 4
CARDIFF, WALES – JUNE 09: New Zealand captain Kane Williamson leads his team off the field after the ICC Champions Trophy match between New Zealand and Bangladesh at SWALEC Stadium on June 9, 2017 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரில் தொடர்ந்து ஐதராபாத் அணிக்காக வில்லியம்சன்னால் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக பந்துவீச்சை பலப்படுத்த, வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தார்கள். அவர் ஒரு நல்ல டி20 பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், அவர் சர்வதேச கேப்டனாக இருப்பதால், ஐதராபாத் அணியின் கேப்டனாக அவரை நியமித்துள்ளார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *