ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய டேவிட் வார்னரின் சகோதரர் ! காரணம் என்ன ? 1

ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய டேவிட் வார்னரின் சகோதரர் ! காரணம் என்ன ?

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 28வது லீக் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய டேவிட் வார்னரின் சகோதரர் ! காரணம் என்ன ? 2

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 64 பந்தில் 124 ரன்கள் குவித்து அசத்தினார். இதையடுத்து மிகப்பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வி அடைந்தது.

டெல்லி பவுலர்கள் முஸ்தாபிசுர ரஹ்மான் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்கள். இதன்மூலம் டெல்லி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துவிட்டது. அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரிஷப் பண்ட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய டேவிட் வார்னரின் சகோதரர் ! காரணம் என்ன ? 3

இந்நிலையில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவித்தனர். அதே சமயத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இருந்தும் வார்னரை வெளியேற்றிவிட்டனர். இவருக்கு பதிலாக முகமது நபி இடம்பெற்று விளையாடினார். இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்சசைகள் கிளம்பியது.

டேவிட் வார்னரின் ரசிகர்கள் அனைவரும் சோகத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், டேவிட் வார்னரை வெளியேற்றியதை பொருத்துக்கொள்ள முடியாத அவரது சகோதரர் ஸ்டீவ் தனது இன்ஸ்டாகிராமில் 2014ம் ஆண்டில் இருந்து வார்னரின் புள்ளிவிவரங்களை ஒன்றிணைத்து பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் “ஹைதராபாத் அணியை பல ஆண்டுகளாக கொண்டு வந்தது வார்னர் தான். அந்த அணியில் தொடக்க வீரர்கள் பிரச்சனை இல்லை. மிடில் ஆர்டரில் நல்ல ரன்களை அடித்து தரும் ஒரு வீரர் தான் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய டேவிட் வார்னரின் சகோதரர் ! காரணம் என்ன ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *