மும்பையை பந்தாடிய அக்ஸர் பட்டேல்.. டேவிட் வார்னர் மந்தமான ஆட்டம்... கடைசியில் கொத்துக்கொத்தாக விக்கெட் விட்ட டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்! 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் அக்ஸர் பட்டேல் இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் வந்தவர்கள் வரிசையாக விக்கெட் இழக்க 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு டெல்லி அணி ஆல் அவுட் ஆனது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌலிங் தேர்வு செய்திருக்கிறார்.

மும்பையை பந்தாடிய அக்ஸர் பட்டேல்.. டேவிட் வார்னர் மந்தமான ஆட்டம்... கடைசியில் கொத்துக்கொத்தாக விக்கெட் விட்ட டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்! 2

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா இருவரும் களமிறங்கினர். பிரிதிவி ஷா நன்றாக துவங்கி மூன்று பவுண்டரிகளை அடித்து 10 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த மனிஷ் பாண்டே வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 5 பவுண்டரிகள் அடித்து 18 பந்துகளில் 26 ரன்களுக்கு பியூஸ் சாவ்லா பந்தில் அவுட்டானார். 2ஆவது விக்கெட்டுக்கு வார்னர்-மனிஷ் பாண்டே ஜோடி 43 ரன்கள் சேர்த்தது.

மும்பையை பந்தாடிய அக்ஸர் பட்டேல்.. டேவிட் வார்னர் மந்தமான ஆட்டம்... கடைசியில் கொத்துக்கொத்தாக விக்கெட் விட்ட டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்! 3

பின்னர் உள்ளே வந்த யாஷ் துல் 2 ரன்களுக்கு மெரிடித் பந்திலும், ரோவ்மன் பவல் 4 ரன்கள், லலித் யாதவ் 2 ரன்கள் இருவரும்  பியூஸ் சாவ்லா பந்திலும் அவுட்டாகியதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு நம்பிக்கையளித்த டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார்.

மும்பையை பந்தாடிய அக்ஸர் பட்டேல்.. டேவிட் வார்னர் மந்தமான ஆட்டம்... கடைசியில் கொத்துக்கொத்தாக விக்கெட் விட்ட டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்! 4

12.3 ஓவர்களில் 98/5 என தடுமாறி வந்த டெல்லி அணிக்கு, அடுத்து உள்ளே அக்ஸர் பட்டேல் வந்த முதல் பந்தில் இருந்த தெறிக்க விட்டார். சிக்ஸர் பவுண்டரிகளாக இவர் பறக்கவிட்டதால் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது இவரது முதல் ஐபிஎல் அரைசதமாகும்.

மும்பையை பந்தாடிய அக்ஸர் பட்டேல்.. டேவிட் வார்னர் மந்தமான ஆட்டம்... கடைசியில் கொத்துக்கொத்தாக விக்கெட் விட்ட டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்! 5

25 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்திருந்த அக்ஸர் பட்டேல், 19ஆவது ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். அதே ஓவரில் வார்னரும் அவுட்டானார். டேவிட் வார்னர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார்.

18 ஓவர்களில் 165/5 என இருந்த டெல்லி அணி, 19ஆவது ஓவரில் 1 ரன் மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளை இழந்தது. 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை அணிக்கு பந்துவீச்சில், பியூஸ் சாவ்லா 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். பெஹரேண்டாஃப் 3 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரிலீ மெரிடித் 2 விக்கெட்டுகள், ஹ்ருதிக் ஷோக்கீன் 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

மும்பையை பந்தாடிய அக்ஸர் பட்டேல்.. டேவிட் வார்னர் மந்தமான ஆட்டம்... கடைசியில் கொத்துக்கொத்தாக விக்கெட் விட்ட டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்! 6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *