டெல்லி vs ஹைதராபாத்: பைர்ஸ்டோவ் அதிரடி.. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்!! 1

ஹைதராபாத்  vs டெல்லி; டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஹைதராபாத்

ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முதலில் டெல்லி அணிக்கு தவான்  மற்றும் ஷா களமிறங்கி நல்ல துவக்கம்  கொடுக்க தவறினர். ஆனால் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி 43 ரன்கள் அடித்து சற்று ஆறுதல் கொடுத்தார்.

பின்னர் வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தனர். ஹைதராபாத் அணிக்கு புவனேஸ்வர் குமார், நபி மற்றும் கவுல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டெல்லி அணிக்கு நடுகள ஆட்டக்காரர்கள் வழக்கம் போல சொதப்ப அணி சற்று தடுமாறியது. பந்துக்கு பந்து ரன் எடுக்கவே தடுமாறியது.

டெல்லி vs ஹைதராபாத்: பைர்ஸ்டோவ் அதிரடி.. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்!! 2
Hyderabad: Sunrisers Hyderabad’s Mohammad Nabi celebrates fall of AB de Villier’s wicket during the 11th IPL 2019 match between Sunrisers Hyderabad and Royal Challengers Bangalore at Rajiv Gandhi International Stadium in Hyderabad on March 31, 2019. (Photo: IANS)

கடைசியில் அக்சர் படேல் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக, இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் அணி 130 என்ற எளிதான இலக்கை துரத்தி வருகிறது.

பின்னர் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மீண்டும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தது வார்னர் மற்றும் பார்ஸ்டோவ் ஜோடி. அதிரடியாக ஆடி 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பைர்ஸ்டோவ்,

டெல்லி vs ஹைதராபாத்: பைர்ஸ்டோவ் அதிரடி.. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்!! 3

அடுத்ததாக வார்னேர் 10 ரன்களுக்கு வெளியேறினார். விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா என மூவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற ஹைதராபாத் அணி பதட்டம் கண்டது.

இறுதியில் நபி நின்று அடிக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைட்ரபாத் வென்றது.

ட்விட்டர் ரியாக்ஷன்

https://twitter.com/armaan794/status/1113891770247536640

https://twitter.com/ursriyaz/status/1113880574702379011

https://twitter.com/rajasthan87/status/1113880159902420992

https://twitter.com/PardikHandya/status/1113876984860483586

https://twitter.com/StreetForEnter/status/1113876228648329216

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *