ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஓபனாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

அவரை எடுத்தால் மட்டுமே மானத்தை காப்பற்ற முடியும்; அட்வைஸ் செய்யும் ஆகாஷ் சோப்ரா !! 2

ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும், இந்திய அணி கடைசி போட்டியிலும் தோல்வியடையும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர் தங்களது ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் இந்திய அணிக்கு தேவையான தனது ஆலோசனைகளை கூறியுள்ளார்.

அவரை எடுத்தால் மட்டுமே மானத்தை காப்பற்ற முடியும்; அட்வைஸ் செய்யும் ஆகாஷ் சோப்ரா !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சில் நிச்சயம் மாற்றம் தேவை. நவ்தீப் சைனியின் இடத்தில் நிச்சயமாக நடராஜனை களமிறக்க வேண்டும். அதே போல் யுஸ்வேந்திர சாஹலை நீக்கிவிட்டு அவரது இடத்தில் குல்தீப் யாதவை களமிறக்க வேண்டும். பும்ராஹ் மற்றும் ஷமியை அணியில் இருந்து நீக்கும் முடிவை இந்திய அணி எடுத்துவிட கூடாது, நிச்சயம் கடைசி போட்டியிலும் அவர்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *