ரீ எண்ட்ரீனா இப்படி இருக்கனும்... இவர் இல்லாம ஆஸ்திரேலியா பக்கம் போயிடாதீங்க; தீபக் சாஹரை பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்ட தீபக் சாஹருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ரீ எண்ட்ரீனா இப்படி இருக்கனும்... இவர் இல்லாம ஆஸ்திரேலியா பக்கம் போயிடாதீங்க; தீபக் சாஹரை பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 2

 

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கையா 4 ரன்னிலும், மருமானி 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

ரீ எண்ட்ரீனா இப்படி இருக்கனும்... இவர் இல்லாம ஆஸ்திரேலியா பக்கம் போயிடாதீங்க; தீபக் சாஹரை பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 3

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் சகப்வா (34) மற்றும் பிராட் எவன்ஸ் (33*) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ரீ எண்ட்ரீனா இப்படி இருக்கனும்... இவர் இல்லாம ஆஸ்திரேலியா பக்கம் போயிடாதீங்க; தீபக் சாஹரை பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 4

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில், கிட்டத்தட்ட கடந்த 7 மாதங்களாக காயத்தால் எவ்வித போட்டிகளிலும் விளையாடாத தீபக் சாஹர், இந்த போட்டியின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்து அதில் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. தீபக் சாஹரை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹரும் சேர்க்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதில் சில;

 

Leave a comment

Your email address will not be published.