நேற்று தனது பட்டயகிளப்பிய பந்துவீச்சிற்கு இதுதான் காரணம் ! பேட்டி கொடுத்த தீபக் சஹார் 1

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் சூழ்ச்சியில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்தார்.

நேற்று தனது பட்டயகிளப்பிய பந்துவீச்சிற்கு இதுதான் காரணம் ! பேட்டி கொடுத்த தீபக் சஹார் 2

இவர் தனது பந்துவீச்சின் மூலம் மயங்க் அகர்வால், கெயில், பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

நேற்று தனது பட்டயகிளப்பிய பந்துவீச்சிற்கு இதுதான் காரணம் ! பேட்டி கொடுத்த தீபக் சஹார் 3

இந்நிலையில், நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்திய தீபக் சஹாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் 3.2 எக்னாமி ரேட் வைத்திருந்தார். தீபக் சஹார் நேற்று தனது முதல் ஓவரில் பஞ்சாப் தொடக்க வீரர் மயங்க் அகர்வாலை ஸ்டெம்புகளை தெறிக்கவிட்டு விக்கெட் எடுத்தார்.

அவர் பந்தை மிடில் ஸ்டெம்பிறக்கு நேராக வீசி ஆஃப் ஸ்டெம்பிற்கு ஸ்விங் செய்தார். இது சரியாக ஆஃப ஸ்டெம்பில் பட்டு விக்கெட் விழுந்தது. தீபக் சஹாரின் இந்த அவுட் ஸ்விஙை கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

நேற்று தனது பட்டயகிளப்பிய பந்துவீச்சிற்கு இதுதான் காரணம் ! பேட்டி கொடுத்த தீபக் சஹார் 4

இந்நிலையில், இந்த அவுட் ஸ்விங் குறித்து பேசியுள்ள தீபக் சஹார் “மயங்க் அகர்வாலின் விக்கெட் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மிடிலில் போட்ட பந்து ஸ்விங் மூலம் ஆஃப் ஸ்டெம்பில் பட்டது. இதுதான் எனது கனவு பந்து. ஜடேஜா எனது ஓவரில் பல கேட்ச்களை பிடித்தார்.

நான் பந்துவீசும் போது ஜடேஜா பீல்டிங்கில் இருக்க வேண்டும். பந்தவீச்சில் நேற்று எனது கடமையை சிறப்பாக செய்தேன். டி20 பவர் பிளேவில் விக்கெட் எடுப்பது முக்கியம் கிடையாது. அதிகமான தாட் பந்துகளை வீச வேண்டும்” என்று தீபக் சஹார் கூறியுள்ளார்.

நேற்று தனது பட்டயகிளப்பிய பந்துவீச்சிற்கு இதுதான் காரணம் ! பேட்டி கொடுத்த தீபக் சஹார் 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *