ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் இந்த முறை கோப்பையை வெல்ல முடியும் என தான் கருதவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசிய முன்னாள் வீரர் !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து தொடர்ந்து பல்வேறு விசயங்களை பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வெல்வது சற்று கடினம் தான் என தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசிய முன்னாள் வீரர் !! 3

டெல்லி கேப்பிடல்ஸ் அணி குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “டெல்லி அணி இந்த தொடரில் நிச்சயம் மிக சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதே வேளையில் டெல்லி அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது கேள்விக்குறி தான். என்னை பொறுத்தவரையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் மூன்று இடங்களுக்குள் நிச்சயம் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன், புதிதாக கேப்டன் பதவி ஏற்றுள்ள ரிஷப் பண்ட்டும் இந்த முறை டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்து கொடுப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியுமா..? ஓபனாக பேசிய முன்னாள் வீரர் !! 4

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த தொடரை போதிய பலத்துடன் சந்திக்க உள்ளது. இந்த தொடரில் எனக்கு பிடித்த அணிகளில் ஒன்றாக இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அசுர பலத்துடன் உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தான் கடும் சவாலாக விளங்கும் என முழுமையாக நம்புகிறேன். கடந்த தொடரில் டெல்லி அணியில் நிலவிய சில சில குறைகளையும் இந்த முறை டெல்லி அணி சரி செய்துள்ளதாக நான் அறிகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *