ஹைதராபாத் அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றை வென்றது டெல்லி அணி! 1

2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக நாக் அவுட் சுற்றினை வென்றுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று ஐபிஎல் நாக் அவுட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.

பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் கீப்பர் சஹா 8 (9) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கப்தில் மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 36 (19) ரன்களில் குப்தில் அவுட் ஆக, 30 (36) ரன்களில் பாண்டேவும் வெளியேறினார்.

ஹைதராபாத் அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றை வென்றது டெல்லி அணி! 2

பின்னர் வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 28 (27) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக அதிரடிகாட்டிய விஜய் ஷங்கர் 25 (11) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் சரிந்தன.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அடுத்து ஆடிய டெல்லி அணிக்கு தவான் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில், ப்ரிதிவி ஷா சிறப்பாக ஆடி அரைசதம் கண்டார். ஆனால், இறுதிவரை நிலைத்திருக்காமல், 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றை வென்றது டெல்லி அணி! 3

அடுத்து, டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 49 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும், அணியின் வெற்றிக்கு உதவினார்.

19.5 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 2 விக்கே

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *