கேக் வெட்டி கொண்டாடும் அளவிற்கு நேத்து தோனி என்ன பண்ணாரு ! நடந்தது என்ன ? உண்மை இதோ ! 1

நேற்று தனது 200வது ஐபிஎல் போட்டி என்பதால் சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் தோனி.

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் சூழ்ச்சியில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்தார்.

கேக் வெட்டி கொண்டாடும் அளவிற்கு நேத்து தோனி என்ன பண்ணாரு ! நடந்தது என்ன ? உண்மை இதோ ! 2

இவர் தனது பந்துவீச்சின் மூலம் மயங்க் அகர்வால், கெயில், பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

கேக் வெட்டி கொண்டாடும் அளவிற்கு நேத்து தோனி என்ன பண்ணாரு ! நடந்தது என்ன ? உண்மை இதோ ! 3

இந்நிலையில், நேற்றயை போட்டி தோனிக்கு 200வது ஐபிஎல் போட்டியாகும். ஐபிஎல் ஆராம்பத்தில் இருந்து தற்போது வரை சிஎஸ்கே அணியை வழிநடத்தி வரும் தோனி சிஎஸ்கேவுக்கு மூன்று முறை கோப்பைகளை பெற்றுத் தந்து இருக்கிறார். கடந்த சீசனில் சிஎஸ்கே 7வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை.

இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் தோனி. நேற்று தனது 200வது ஐபிஎல் போட்டி என்பதால் சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் தோனி. இதை சிஎஸ்கே தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும், தோனியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *