விராட் கோலியின் அணி என்னுடைய அணியை விட அதிக போட்டியில் வெற்றி பெறும் ! - தோனி 1

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

சிஎஸ்கே வீரர்களால் ஏற்பட்ட குழப்பம் ! என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இங்கிலாந்து அணி ! 2

இதன் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில்  இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.  

அகமதாபாத் பிட்ச் குறித்து பேசிய விராட் கோலியை தாக்கும் முன்னாள் வீரர்கள் ! 3

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் விராட் கோலி இந்திய மைதானத்தில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டனாக இருக்கிறார். இதற்கு முன் இந்திய தலைசிறந்த கேப்டன் தோனி இந்திய மைதானத்தில் 30 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 21 போட்டிகளில் வென்றுள்ளார். இதன் மூலம் இந்திய மைதானத்தில் அதிக வெற்றி கேப்டனாக தோனி இருந்தார்.

விராட் கோலியின் அணி என்னுடைய அணியை விட அதிக போட்டியில் வெற்றி பெறும் ! - தோனி 2

ஆனால் தற்போது விராட் கோலி இந்திய மைதானத்தில் 29 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டதில் 22 போட்டிகளை வென்று கொடுத்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இதனால் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து தோனி தனது கருத்தை கூறியுள்ளார். தோனி கூறுகையில் “விராட் கோலி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது அணி என்னுடைய அணியை விட அதிக டெஸ்டில் வெற்றி பெறும்” என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *