தமிழக வீரரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன தல தோனி ! அவருடன் அமர்ந்து பேசிய தோனி ! என்ன பேசினார் தெரியுமா ? 1

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் சூழ்ச்சியில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்தார்.

தமிழக வீரரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன தல தோனி ! அவருடன் அமர்ந்து பேசிய தோனி ! என்ன பேசினார் தெரியுமா ? 2

இவர் தனது பந்துவீச்சின் மூலம் மயங்க் அகர்வால், கெயில், பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தமிழக வீரரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன தல தோனி ! அவருடன் அமர்ந்து பேசிய தோனி ! என்ன பேசினார் தெரியுமா ? 3

இந்த போட்டியில் பஞ்சாப் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த போது தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் தனியாளாக நின்று 36 பந்தில் 47 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். 2013 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் ஷாருக்கான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய இவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார்.

தமிழக வீரரின் ஆட்டத்தை கண்டு மிரண்டு போன தல தோனி ! அவருடன் அமர்ந்து பேசிய தோனி ! என்ன பேசினார் தெரியுமா ? 4

சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டியில் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்தாண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றார். நேற்றையை போட்டியில் சிறப்பாக விளையாடிய இவருடன் சிஎஸ்கே கேப்டன் தல தோனி போட்டி முடிந்த பின் பேசியிருக்கிறார். அப்போது ஷாருக்கான் தோனியிடம் பல விஷயங்கள் பற்றி பேசினார். மேலும் தோனியிடமிருந்து பல டிப்ஸ்களை பெற்று இருக்கிறார். இவர்கள் இவரும் பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *