JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

கிரிக்கெட்டே வேண்டாமென்று வேறு தொழிலில் இறங்கிய தோனி; இப்போது கையிலெடுத்த தொழில் என்ன தெரியுமா?

ஓராண்டு காலமாக, கிரிக்கெட் ஆடாத தோனி, தற்போது புதிய வேலையில் இறங்கியுள்ளார். அதன் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய தோனி, உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும், 2020ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்கிற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அந்த சம்பவத்திற்கு பிறகு.. கிரிக்கெட்டே வேண்டாமென்று வேறு தொழிலில் இறங்கிய தோனி; இப்போது கையிலெடுத்த தொழில் என்ன தெரியுமா? வெளியான வீடியோ! 1

தொடர்ந்து மவுனம் காத்து வந்த தோனி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை மற்ற அணிகளுக்கு முன்பாக பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே துவங்கினார். சென்னை வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு வரவேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது. கோப்பையை 4வது முறையாக தட்டித்தூக்க பிளான் நடக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது.

தோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக்கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் இடம்பெறலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு.. கிரிக்கெட்டே வேண்டாமென்று வேறு தொழிலில் இறங்கிய தோனி; இப்போது கையிலெடுத்த தொழில் என்ன தெரியுமா? வெளியான வீடியோ! 2
Chennai: CSK Skipper MS Dhoni during the practice session, at MA Chidambaram Stadium in Chennai, Thursday, March 12, 2020. The spread of coronavirus has cast a shadow with Sports Ministry planning to hold IPL matches in closed doors as foreign players were ruled out of the game till April 15 following government-imposed travel restrictions. (PTI Photo)(PTI12-03-2020_000244B)

துரதிஷ்டவசமாக, கொரோனா வைரஸ் காரணமாக, மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தோனியை மீண்டும் இந்திய அணியில் காணலாம் என்கிற ரசிகர்களின் கனவும் தகர்ந்தது என்று தான் கூறவேண்டும்.

தோனி, ஊரடங்கு காரணமாக ராஞ்சியில் உள்ள  குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தோனி இயற்கை விவசாயம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தோனி டிராக்டர் ஓட்டிய வீடியோ வைரலானது.

அந்த சம்பவத்திற்கு பிறகு.. கிரிக்கெட்டே வேண்டாமென்று வேறு தொழிலில் இறங்கிய தோனி; இப்போது கையிலெடுத்த தொழில் என்ன தெரியுமா? வெளியான வீடியோ! 3

இந்நிலையில், தற்போது தோனி விளைநிலத்தில் டிராக்டரால் உழவு ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. தோனி இயற்கை விவசாயத்தில் இறங்கியிருப்பது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரிய விஷயம். இனி கிரிக்கெட் பக்கமே வரமாட்டார் போலும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தோனியின் செயலும், இனி கிரிக்கெட்டே வேண்டாம்; வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம் என்கிற பாணியில் தான் உள்ளது.

வீடியோ: • SHARE
 • விவரம் காண

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !!

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும்...