“இவங்க தான் வெற்றிக்கு காரணம்” என்று கெத்தா பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி !

14வது ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் விரைவிலயே விக்கெட்களை இழந்தனர். இதில் டூபிளெசிஸ் அடித்த 33 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது.

"இவங்க தான் வெற்றிக்கு காரணம்" என்று கெத்தா பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ! 2

இதையடுத்து மொயின் அலி 26 ரன்கள், ராயுடு 27 ரன்கள் , தோனி 18 ரன்கள் குவித்துள்ளார்கள். இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மொத்தம் 11 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்கள். இதில் சேதன் சாகரியா 3 விக்கெட்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். தற்போது 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.

ஆனால் பட்லரை தவிர அனைத்து பேட்ஸ்மங்களும் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோஸ் பட்லர் அடித்த 49 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது.

"இவங்க தான் வெற்றிக்கு காரணம்" என்று கெத்தா பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ! 3

சிஎஸ்கே பவுலர்கள் மொயின் அலி 3 விக்கெட்கள், ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதுபோக ஜடேஜா 4 கேட்ஸ்களை பிடித்து அசத்தினார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கேவின் இந்த இரண்டாவது வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி வெற்றிக்கான காரணத்தை கூறியுள்ளார். அப்போது அவர் பேசுகையில் ” அந்தந்த நேரத்தில் என்ன வேண்டும் என்பதை பற்றியே யோசிப்பேன். சாம் கரன் இன்று சிறப்பாக செயல்பட்டார். தீபக் சஹார் இன்று பல நக்கெல் பந்தை முயற்சித்தார். ஜோஸ் பட்லர் பந்து டர்னாகும் போது ரிவர்ஸ் ஷாட் விளையாடியதை கண்டு கொள்ளவில்லை.

"இவங்க தான் வெற்றிக்கு காரணம்" என்று கெத்தா பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ! 4

வழக்கத்தை விட இன்று பனி நிறைவாகே இருந்து. நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை அடித்திருக்கிறோம். நாங்கள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பவுலர்கள் இப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடி வருகிறார்கள். நாம் விளையாடும் போது எந்த வீரரையும் தகுதியற்றவர் என்று சொல்லக்கூடாது.

சிறப்பாக விளையாடுவதற்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது. நான் 24 வயதில் இருந்த போதும், 40 வயது தற்போதும் என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் யாராவது என்னை தகுதியற்றவர் என்று சொல்லும் போது அது எனக்கு மிகப்பெராய பாசிட்டிவாக இருக்கிறது. நான் இளம் வீரர்களை விளையாட வைத்து, அவர்களது திறமையை வெளிப்படுத்துவேன்” என்று தோனி பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *