தோனியின் ஃபினிஷிங்க்கு ஈடு இணையே இல்லை - ரெய்னா புகழாரம்!! 1

தோனியின் ஃபினிஷிங்கிற்கு ஈடு இணையே இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வருகின்ற உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக மிடில் ஆர்டர்களில் முக்கிய பங்கு வகிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் இலங்கை வீரர் நுவன் குலசேகர வீசிய பந்தை தோணி சிக்ஸர் விளாசியது, எந்த ஒரு இலக்கையும் துரத்த முடியும் என்பதை நினைவுபடுத்தியது. தெளிவான மனநிலையுடன் எதிர்கொண்டால் எவ்வித இலக்கையும் துரத்தி பிடிக்கலாம். ஆனால், தற்போது தோனியின் பினிஷிங் முன்பு போல இல்லை என பெரிதும் நம்பப்படுகிறது.

தோனியின் ஃபினிஷிங்க்கு ஈடு இணையே இல்லை - ரெய்னா புகழாரம்!! 2

அவரது கூர்மையான விக்கெட் கீப்பிங் தான், அவரை இன்றளவும் முதன்மை விக்கெட் கீப்பராக வைத்திருக்கிறது. 38 வயதான தோனி பேட்டிங் தான் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது.

“தோனி 4வது அல்லது 6வது வீரராக களமிறங்குவது தான் சரியானதாக இருக்கும்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

” அவர் ஆட்டத்தின் போக்கை எளிதாக கணித்து, தனது அனுபவங்களை ஒன்றுசேர்த்து வெற்றிகளை குவிக்க கூடியவர். அவரது பினிஷிங் திறமைக்கு ஈடு இணையே இல்லை” என்றார்.

தோனியின் ஃபினிஷிங்க்கு ஈடு இணையே இல்லை - ரெய்னா புகழாரம்!! 3

இந்தியாவுக்கு 340 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி, 51 ரன்களை சராசரியாக கொண்டு ஒருநாள் அரங்கில் 10,000 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா உலகக் கோப்பையை வென்றதற்கு இவரது பினிஷிங் முக்கிய காரணம். கேப்டன் கோஹ்லி வழக்கமாக இறங்கும் மூன்றாவது இடத்தில இருந்து சற்று கீழிறங்கி கூட ஆடலாம்.

“நான் மூன்று அல்லது நான்காவது இடம் (கோலிக்கு) நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என ரெய்னா, இந்தியாவின் 2011 உலகக் கோப்பை அணியின் உறுப்பினர் கூறினார். “துவக்க வீரர்கள் சொதப்பினால், கோஹ்லியைப் போல ஒருவரை அணியில் வைத்திருக்க வேண்டும்.”

தோனியின் ஃபினிஷிங்க்கு ஈடு இணையே இல்லை - ரெய்னா புகழாரம்!! 4

இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து பலம் வாய்ந்ததாக இருக்கும். அதேபோல, வேஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளின் போட்டிகளும் சுவாரஸ்யமாக இருக்கும்.

பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பௌலர் மூவரையும் சமபலத்துடன் கொண்ட அணியே வெல்லும் என ரெய்னா கருதுகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *