மெளனராகம் இசையும்!! தோனியின் புதிய டிராக்டரும்! CSK வெளியிட்ட அற்புத வீடியோ 1

தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் கடைசியாக விளையாடிய தோனி, ஐபிஎல்லில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நிறைவேறாமல் போனது. இந்நிலையில் தற்போது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார் தோனி.

இந்நிலையில் தோனியின் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் தான் வாங்கி இருக்கும் புதிய டிராக்டரை தோனி ஓட்டி வருகிறார். அந்த வீடியோவுக்கு மெளன ராகம் திரைப்படத்தில் வரும் இளையராஜாவின் இசையை கோர்த்து வெளியிட்டுள்ளது சிஎஸ்கே. ‘இளையராஜாவுடன் தல தோனியின் சந்திப்பு” என அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இசையோடு தோனி டிராக்டர் ஓட்டும் அந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

 

தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஊரடங்கு காலங்களில் தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது சமூக வலைதளங்களில் தோனி குறித்தும், அவர் ஊரடங்கில் என்ன செய்கிறார் என்பது குறித்தும் பல விஷயங்களை வீடியோ வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது 10 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். அதில் மகள் ஷிவா உடன் உரையாடும் அவர் வானத்தில் தெரியும் மேகக்கூட்டங்கள் பற்றியும், மழை எப்படி வருகிறது என்பது பற்றியும் விளக்குகிறார்.

 

மேலும் ஷிவாவிடம் “நீ சிறு வயதில் இடிக்கும் மின்னலுக்கும் மிகப் பயப்படுவாய்” எனக் கூற ஷிவா, நான் எப்போதும் அதற்கு பயப்படமாட்டேன் எனக் கூறுகிறார். இறுதியாக தோனி வழக்கம்போல தனது மகளுடன் பைக்கில் ரைடு வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

https://www.instagram.com/sakshisingh_r/?utm_source=ig_embed

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *