இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 1

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டாம் மூடி கூறியதாவது ஹஸல்வுட் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகிய இருவரும் தான் ஆஸ்திரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரிவித்துள்ளார.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 2

இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 3

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணி சார்பாக களமிறங்கிய டேவிட் வார்னர் (83), பின்ச் (60), ஸ்டீவ் ஸ்மித் (104), லபுசேன் (70), மேக்ஸ்வெல் (63*) என அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து ரன் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலிய அணி 389 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அசாத்திய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 30 ரன்களும், மாயன்க் அகர்வால் 28 ரன்களும் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 4

இதனையடுத்து வந்த விராட் கோஹ்லி 87 பந்துகளில் 89 ரன்களும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் 66 பந்துகளில் 76 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாட தவறியதால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதர்க்கு முக்கிய காரனம் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் களமிறங்கிய 5 வீரர்களும் அரை சதத்தை கடந்து ஒரு இமாலய ஸ்கோரை நிர்னயித்தனர்.

இது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி உண்டாக்கியது இந்திய அணிக்கு தோல்விக்கு முக்கிய காரணம்அவர்களின் அணியின் மோசமான பந்துவீச்சு ஆகும்.

ஒரு ஓவருக்கு ஏழுக்கும் அதிகமான ரன்களை கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவினர்.

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை சந்தித்தனர்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 5

ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியால் உருவாக்க முடியவில்லை குறிப்பாக ஹஸல்வுட் நேற்றைய போட்டியில் முக்கிய விக்கெட்டான தவான் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினர் இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 6

மேலும் டாம் மூடி கூறியதாவது ஹஸல்வுட் மற்றும் ஆடம் ஜாம்பா போன்ற வீரர்கள் இந்திய அணியில் இல்லாததுதான் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அவர் கூறினா.ர் நேற்றைய போட்டியில் ஹஸல்வுட் மிகச் சிறப்பாக செயல்பட்டார் இவருடைய பந்துவீச்சு மிகவும் துல்லியமாக இருந்தது குறிப்பாக ஷாட் பிட்ச் பந்துகள் மிக அபாரமாக இருந்தது என்று அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் !! 7

மேலும் ஆடம் ஜாம்பா இந்தியாவுக்கு எதிராக 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 24 கைபற்றியுள்ளார் இவர் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *