சேவாக்கை போல் ஒரு சுயலமில்லா பேட்ஸ்மேனை பார்த்ததில்லை என4 குமார சங்ககாரா கூறியுள்ளார்,.

ஒருபோதும் சுயநலமாக ஆடாத வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான சேவாக் அபாயகரமான வீரர். அசாத்தியமான அதிரடியால் போட்டியின் போக்கையே மாற்ற வல்லவர். இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்குவதை வழக்கமாக கொண்டவர் சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர், 2 முச்சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

சேவாக்கின் மிகப்பெரிய பலமே, எதிரணி எதுவாக இருந்தாலும் சரி, எதிரே பந்துவீசுவது யாராக இருந்தாலும் சரி, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை ஆடக்கூடியவர்.

பேட்டிங் செய்யும் போது வாயில் பழைய இந்தி மெலடிகளின் முணுமுணுப்பு, ஆனால் மட்டையிலிருந்து கிளம்புவது மெலடி அல்ல அதிரடி. The Uncluttered mind என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் இவரைப்பற்றி கூறியது ரத்தினச் சுருக்கமான அவதானிப்பு. ஒருமுறை ஆஸ்திரேலியா தொடருக்கு இவரைக் கழற்றி விட்டுச் சென்ற போது இதே இயன் சாப்பல் where is viru? என்று எழுதிய பத்தியில் இந்திய அணித்தேர்வு நிர்வாகம் அவரை மீண்டும் அணிக்குள் அழைத்தது. சிட்னி மோசடி ஆஸி.வெற்றிக்குப் பிறகு பெர்த்தில் வெற்றி பெற்றதில் விரூவின் பங்களிப்பு சொற்பமானாலும் மிகப்பெரிது.

அடுத்த அடிலெய்ட் போட்டியில் அரண்டு போன ஆஸ்திரேலிய அணி தோல்வி பயத்தில் பம்மிப் பம்மி ஆடிய போது விரேந்திர சேவாக் தன் மீள்வருகையை மீண்டும் ஒரு அற்புத சதம் (155) மூலம் நிரூபித்தார். இந்தச் சதத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் சேவாக் அல்லாத ஒரு இரண்டு மணி நேர ஆட்டம், அதாவது பவுண்டரியே இல்லாமல் ஒரு செஷனில் ஆடினார் சேவாக். மிகப்பெரிய இன்னிங்ஸ் அது, அதுவும் கம் பேக் இன்னிங்ஸ்… என்னை இனி அணியை விட்டு தூக்குவாயா? என்று மட்டையால் பதில் சொன்ன இன்னிங்ஸ்.

இந்திய அணியின் மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரரான சேவாக்கிற்கு குமார் சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார். சேவாக் குறித்து கருத்து தெரிவித்த சங்கக்கரா, முதன்முதலில் வீரேந்திர சேவாக்கின் பேட்டிங்கை பார்த்தபோது அதிகளவில் ரசித்து பார்த்தேன். அவரது பேட்டிங் என்னை ஈர்த்தது. அவரது பேட்டிங் திறமையால் மட்டுமல்ல, விரைவில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற எண்ணம் கொண்ட பேட்ஸ்மேன்களை கண்டறிவது மிகவும் கடினம். இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்து அடித்து ஆட தொடங்கி பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுவார். அதேபோல அவரது சொந்த பேட்டிங் சராசரியை பற்றியோ சாதனைகளை பற்றியோ யோசிக்கவே மாட்டார். அவரது எண்ணம் முழுவதுமே, அணிக்காக விரைவில் ரன்களை குவித்து வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று சேவாக்கை புகழ்ந்துள்ளார் குமார் சங்கக்கரா. • SHARE

  விவரம் காண

  எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

  இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...

  வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்!

  இங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....

  நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் !!

  நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...

  1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி !!

  1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...