கம்பீர்
நான் சொல்றத இப்பயாச்சும் கேளுங்க… தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுத்தா நமக்கு தான் பிரச்சனை; காரணத்துடன் விளக்கிய கம்பீர் !!

ஆடும் லெவனில் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை எடுப்பது இந்திய அணிக்கு பிரச்சனையாக முடியும் என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.

பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

பாபர் அசாம்

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தநிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், ஆடும் லெவனில் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை எடுப்பது இந்திய அணிக்கு பிரச்சனையாக முடியும் என தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

 

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “நான் பல முறை கூறியது தான், ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை எடுப்பது தேவையற்றது. ரிஷப் பண்ட்டை எடுப்பது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும். ரிஷப் பண்ட் அணியில் இருந்தால் அவர் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி தேவைக்கு ஏற்ப விளையாடுவார். ரிஷப் பண்ட் 5வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா மற்றும் அச்ஷர் பட்டேல் ஆகியோர் முறையே 6வது மற்றும் 7வது இடத்திலும் களமிறங்க வேண்டும் என்பதே எனது கருத்து. வெறும் 10 பந்துகள் விளையாடுவதற்கு ஒருவரை ஆடும் லெவனில் எடுப்பது நல்லதல்ல. தினேஷ் கார்த்திக்கால் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட முடியும் என எனக்கு தோன்றவில்லை. இந்திய அணியும் அவரிடம் இருந்து அதிரடி ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்க்கிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களை கணிப்பது எளிதல்ல, அனைத்தும் நான் நினைத்தது போலவே அப்படியே நடந்துவிடாது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *