புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கிடைத்த மிக சிறந்த வீரர்... தேவை இல்லாம அவர திட்டாதீங்க; முன்னாள் வீரர் ஆதரவு !! 1

ரன்களை வாரி வழங்கிய போதும் புவனேஸ்வர் குமார் சிறந்த பந்துவீச்சாளர் தான் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

மூன்று விதமான தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், இந்திய அணிக்காக பல நேரங்களில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கிடைத்த மிக சிறந்த வீரர்... தேவை இல்லாம அவர திட்டாதீங்க; முன்னாள் வீரர் ஆதரவு !! 2

ஸ்விங் கிங் என்ற பெயர் பெற்ற புவனேஸ்வர் குமார் ஒன்றுக்கும் மேற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகள் சர்வதேச இந்திய அணிக்காக விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தார்.பின் அதிலிருந்து மீண்டுவந்த புவனேஷ்வர் குமார், பந்தை வேகமாக வீசவும் முடியாமல், பந்தை ஸ்விங் செய்யவும் முடியாமல் தடுமாறியதால், அசிங்கப்படுவதற்கு முன்பே இவர் ஓய்வை அறிவித்துவிடுங்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் அந்த விமர்சனத்தையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை வெளிப்படுத்திய புவனேஷ் குமார் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 தொடருக்கான ரெகுலர் வீரராக வலம் வரத் துவங்கினார்.

புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கிடைத்த மிக சிறந்த வீரர்... தேவை இல்லாம அவர திட்டாதீங்க; முன்னாள் வீரர் ஆதரவு !! 3

அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் வட்டத்தில் நல்ல பெயரை சம்பாதித்து வந்த புவனேஷ் குமார், ஆசிய கோப்பையில் தன் பெயருக்கு தானே கலங்கத்தை தேடிக்கொண்டார்.

ஆசியக் கோப்பை தொடரில் முக்கியமான இரண்டு போட்டிகளிலும்(இலங்கை,பாகிஸ்தான்) அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக திகழ்ந்த புவனேஸ்வர் குமார், நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து அதிருப்தியை சம்பாரித்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கிடைத்த மிக சிறந்த வீரர்... தேவை இல்லாம அவர திட்டாதீங்க; முன்னாள் வீரர் ஆதரவு !! 4

கடைசி இரண்டு ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் 19-வது ஓவரை வீசிய புவனேஷ் குமார் 16 ரன்கள் வாரி இரைத்தார். இதன் காரணமாக இந்திய அணி வெற்றிபெற வேண்டிய போட்டியில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

 

இதன் காரணமாக புவனேஸ்வர் குமாரை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தற்போதைய நிலையிலும் புவனேஸ்வர் குமார் சிறந்த வீரர் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கிடைத்த மிக சிறந்த வீரர்... தேவை இல்லாம அவர திட்டாதீங்க; முன்னாள் வீரர் ஆதரவு !! 5

அதில், புவனேஸ்வர் குமார் மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்தை எல்லாம் நான் நிராகரிக்கிறேன், என்னை பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார் சிறந்த பந்துவீச்சாளர், அவருடைய பங்கு எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதுதான், ஆனால் அணியின் கேப்டன் அவரிடம் இருந்து கடைசி இரண்டு ஓவர் சிறப்பாக எதிர்பார்க்கிறார். அதையும் புவனேஸ்வர் குமார் கொடுக்க தான் முயற்சி செய்கிறார்” என்று புவனேஸ்வர் குமாருக்கு ஆதரவாக மேத்யூ ஹேடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.