தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம் !! 1

தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம்

அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றி காத்திருப்பதாக இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப்  யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம் !! 2

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்ச்சாளர் குல்தீப் யாதவ், இந்த தொடரில்  தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது, “இந்த தொடரில் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவது ஒன்று மட்டுமே எனது இலக்கு. இருவருடன் ஒரே அணியில் விளையாடி வருவதால் அவர்களுக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை இதற்காக நான் வருந்தவும் செய்திருக்கிறேன், ஆனால் இந்த ஐ.பி.எல் தொடர் மூலம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, இதனை வீணடிக்க மாட்டேன். மற்ற தொடர்களை விட இந்த தொடர் அதிக முக்கியத்துவம் வாந்தததாக பார்க்கப்படுகிறது, என்னால் முடிந்த வரை இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம் !! 3

மேலும் இந்திய அணியில் தோனியின் பங்கு குறித்து குல்தீப்  யாதவ் சமீபத்தில் அளித்த மற்றொரு பேட்டி ஒன்றில் கூறியதாவது “சிக்கலான பல போட்டிகளில் இந்திய அணியின் த்ரில் வெற்றிக்கு கோஹ்லி மற்றும் தோனி என இருவரின் ஆலோசனைகளும் திட்டங்களும் தான் காரணம். ஒவ்வொரு போட்டியில் கோஹ்லி பீல்டிங்கை செட் செய்து விடுவார், ஆனால் தோனி பாய் தான் யார் பந்துவீச வேண்டும் என்பதை தீர்மானிப்பதோடும், என்னை போன்ற இளம் வீரர்கள் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று கொண்டு எங்களை வழிநடத்தி கொண்டே இருப்பார். இதனை தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

தோனி, கோஹ்லியை வீழ்த்துவது தான் எனது இலக்கு; இளம் வீரர் விருப்பம் !! 4

தோனி மற்றும் கோஹ்லி என இருவருமே கிரிக்கெட்டின் கில்லாடிகள். என்னை போன்ற இளம் வீரர்கள் அவர்களிடம் இருந்து இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமுடன் இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *