Dwayne Bravo, Dwayne Bravo IPL, Dwayne Bravo IPL 10, IPL 2017, Cricket

நான் உடற்தகுதியாக இருக்கும்பொழுது அணியில் சேர்க்கப்படவில்லை. இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான் என வெயின் பிராவோ கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் வெயின் பிராவோ. டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் மட்டுமே பங்கேற்று வந்தார். மேலும், பல்வேறு கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் முக்கிய வீரராக பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பிக்பாஷ் தொடரின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்: வெய்ன் பிராவோ சொல்கிறார் 1

தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள வெயின் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்பினார். விரைவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட விரும்பினார். அணியில் இடம் கிடைக்கும் என அதிக நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்புவது சந்தேகம் என பிராவோ கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்: வெய்ன் பிராவோ சொல்கிறார் 2
31 July 2016; Dwayne Bravo of Trinbago Knight Riders celebrates taking 4 wickets for 13 runs during Match 29 of the Hero Caribbean Premier League match between Trinbago Knight Riders and St Kitts and Nevis Patriots at Central Broward Stadium in Lauderhill, Florida, United States of America. Photo by Randy Brooks/Sportsfile.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான 34 வயது வெயின் பிராவோ கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருக்கிறேன். நல்ல உடல் தகுதியுடன் இருந்த போதும் என்னை சேர்க்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்: வெய்ன் பிராவோ சொல்கிறார் 3
MELBOURNE, AUSTRALIA – DECEMBER 29: Dwayne Bravo of the Melbourne Renegades is taken from the ground on a stretcher after injuring himself in the field during the Big Bash League match between the Melbourne Renegades and Perth Scorchers at Etihad Stadium on December 29, 2016 in Melbourne, Australia. (Photo by Darrian Traynor/Getty Images)

எனவே மீண்டும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு திரும்ப முடியும் என்று நினைக்கவில்லை. என்னால் எத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட முடியுமோ? அத்தனை காலம் வரை தொடர்ந்து மற்ற போட்டிகளில் விளையாடுவேன்’’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நான் திரும்புவது சந்தேகம்: வெய்ன் பிராவோ சொல்கிறார் 4

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் வெயின் பிராவோ வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் பிடித்தார். அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *