இவர் இல்லாம ரொம்ப கஷ்டம்... ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு பிரச்சனை உறுதி ; முன்னாள் வீரர் உறுதி !! 1

ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

இவர் இல்லாம ரொம்ப கஷ்டம்... ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு பிரச்சனை உறுதி ; முன்னாள் வீரர் உறுதி !! 2

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர், அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும்க் வெளிப்படுத்தி வருகின்றனர்

இவர் இல்லாம ரொம்ப கஷ்டம்... ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு பிரச்சனை உறுதி ; முன்னாள் வீரர் உறுதி !! 3

குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியில் இடம்பெறாதது இந்திய அணியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதற்கான தீர்வு என்னவென்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆளுநர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட், ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

இவர் இல்லாம ரொம்ப கஷ்டம்... ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு பிரச்சனை உறுதி ; முன்னாள் வீரர் உறுதி !! 4

இதுகுறித்து சல்மான் பட் பேசியதாவது,“தற்போது இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்திப் சிங்,மற்றும் ஆவேஷ் கான் உள்ளனர்.ஆனால் இந்திய அணி பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரும் இழப்பாகும்,அவர் ஒரு தரம்வாய்ந்த ஹை க்ளாஸ் பந்து வீச்சாளர்,டெத் ஓவர், நியூ பால் என அனைத்திலும் சிறப்பாக பந்துவீச கூடியவர் என்று இந்திய அணியை வெற்றியின் பாதையில் கொண்டு செல்ல கூடியவர் என்று சல்மான் பட் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.