உலகக்கோப்பை ஜெயிக்கனும்னா ஆசை இருந்தா இனி இத மட்டும் பண்ணாதீங்க; இந்திய வீரர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 1
உலகக்கோப்பை ஜெயிக்கனும்னா ஆசை இருந்தா இனி இத மட்டும் பண்ணாதீங்க; இந்திய வீரர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்

உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன் லாத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு தொடர், முத்தரப்பு என அனைத்திலும் எதிரணிகளை இலகுவாக வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா, ஐசிசி.,யால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் ஏனோ தொடர்ந்து சொதப்பியே வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் கூட வெற்றியின் அருகில் வரை சென்ற இந்திய அணி, அதன்பிறகு நடைபெறும் பெரிய தொடர்களில் மிக மோசமான தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

இந்திய அணி

கடந்த வருட டி.20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும், இந்த வருடத்திற்கான டி.20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது.

சமகால கிரிக்கெட்டின் வலுவான அணியாக பார்க்கப்படும் இந்திய அணி ஐசிசி., தொடர்களில் தொடர்ந்து சொதப்புவி வருவதற்கான சரியான காரணமே தெரியாததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். அதே போல் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் பலர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

உலகக்கோப்பை ஜெயிக்கனும்னா ஆசை இருந்தா இனி இத மட்டும் பண்ணாதீங்க; இந்திய வீரர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 2

அந்தவகையில், இந்திய அணி உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சொதப்பி வருவது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ரோஹித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளருமான மதன் லாத், இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதன் லாத் பேசுகையில், “கடந்த 7-8 மாதங்களாக இந்திய அணி நிலையான அணியாகவே இல்லை. உலக கோப்பைக்கு தயாராகும்போது தெளிவு வேண்டும். நிலையான, வலுவான அணியாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக திடீரென ஒருவர் வந்து இன்னிங்ஸை தொடங்குவார். திடீரென ஒருவர் வந்து பந்துவீசுவார். அணியில் நிலைத்தன்மையே இல்லை. பணிச்சுமை என்பதையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அனைவரும் ப்ரொஃபஷனல் கிரிக்கெட் வீரர்கள். எனவே பணிச்சுமை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அப்படியென்றால் ஐபிஎல்லில் ஆடாமல் இருக்க வேண்டியதுதானே..? ஐபிஎல்லில் ஏன் ஆடுகிறார்கள்..? உலக கோப்பையை ஜெயிக்க வேண்டுமென்றால் ஐபிஎல்லில் ஆடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *