எனக்கே தெரியும்... இனி எனக்கு இடமே கொடுக்க மாட்டாங்க; வேதனையை வெளிப்படுத்திய சீனியர் வீரர் !! 1

இனிமேல் இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்று விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, 2015ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பிறகு இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான ரெகுலர் வீரராக வலம் வந்தார்.

எனக்கே தெரியும்... இனி எனக்கு இடமே கொடுக்க மாட்டாங்க; வேதனையை வெளிப்படுத்திய சீனியர் வீரர் !! 2

விருத்திமான் சாஹா ஓய்வு அறிவிக்கும் காலம் வரை இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவருடைய பார்ம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை, இருந்தபோதும் இந்திய அணி இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்தது, ஆனால் அதையும் அவர் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

 

இதனால் இந்தியா அணி ரிஷப் பண்டிடம் வாய்ப்பைக் கொடுத்தது இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரிஷப் பண்ட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வரத்தொடங்கினார்.

எனக்கே தெரியும்... இனி எனக்கு இடமே கொடுக்க மாட்டாங்க; வேதனையை வெளிப்படுத்திய சீனியர் வீரர் !! 3

இதன் காரணமாக விருத்திமான் சஹா இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டார். சர்வதேச இந்திய அணியில் இவர் பங்கு பெறவில்லை என்றாலும், உள்ளூர் போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி விளையாடி வந்தார்.

 

குறிப்பாக நடந்துமுடிந்த 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய விருத்திமான் சஹா இக்கட்டான நிலையில் சிறப்பாக செயல்பட்டு பல போட்டிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

 

இதனால் 38 வயதாகும் விருத்திமான் சாஹா மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதில் இவருடைய பெயர் இடம்பெறவில்லை.

எனக்கே தெரியும்... இனி எனக்கு இடமே கொடுக்க மாட்டாங்க; வேதனையை வெளிப்படுத்திய சீனியர் வீரர் !! 4

இந்த நிலையில் இந்த விஷயம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் என்று விருத்திமான் சஹா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து விருத்திமான் சஹா பேசுகையில், “இனிமேலும் நான் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நான் நினைக்கவில்லை, இதை ஏற்கனவே அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் என்னிடம் தெரிவித்து விட்டார்கள். ஒருவேளை அவர்கள் என்னை இந்திய அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால், ஐபிஎல் தொடரில் என்னுடைய ஆட்டத்தை பார்த்துவிட்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னை எடுத்திருப்பார்கள், என்னைப் பொருத்தவரையில் கிரிக்கெட்டை என்னால் எவ்வளவு நாள் விளையாட முடியுமோ அவ்வளவு நாள் ரசித்து விளையாடுவேன், மேலும் விளையாடிக் கொண்டே இருப்பேன் ” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.