2020 டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவேன்: பாப் டு ப்லெசிஸ்!! 1

2020ல் நடக்கும் டி20 உலக்கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என அறிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பாப் டு பிலேசிஸ்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்களும்,

2020 டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவேன்: பாப் டு ப்லெசிஸ்!! 2

டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவிக்கவும் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் லின் டக்அவுட்டிலும், ஆரோன் பிஞ்ச் 11 ரன்னிலும் வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் சிறப்பாக விளையாடி 102 பந்தில் 106 ரன்கள் சேர்த்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 63 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும், மேக்ஸ்வெல் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

 

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 29 ஒருநாள் போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 முறை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி ஜான் ஹேஸ்டிங்ஸ் கூறுகையில், ‘கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து ரத்த வாந்தி எடுத்தேன்.

2020 டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவேன்: பாப் டு ப்லெசிஸ்!! 3

இதனால் பவுலிங் செய்ய முடியவில்லை. எனவே இது என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணாதவரை எனக்கு நிம்மதியில்லை. இது எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இப்போது இதனை நான் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மிகவும் கடினமாக உள்ளது.

பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ என மன வேதனையுடன் அறிவித்தார்

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *