இஷாந்த், அஸ்வின், கோலி, சாம் கர்ரன் சாதனைகள் : முதல் டெஸ்ட் புள்ளிவிவரப் பட்டியல் 1

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, பல சாதனைகளை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது.

நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் 180 ரன்னில் ஆட்டமிழக்க முக்கிய பங்களித்தார் இஷாந்த் சர்மா. 13 ஓவர்கள் வீசிய அவர், 51 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்தார்.இஷாந்த், அஸ்வின், கோலி, சாம் கர்ரன் சாதனைகள் : முதல் டெஸ்ட் புள்ளிவிவரப் பட்டியல் 2

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்த சாதனைகளின் விவரம் பின் வருமாறு:-

► இஷாந்த் சர்மா (53), ஒரு வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்களை, 2014ம் ஆண்டில் இருந்து வெளியூர் மண்ணில் வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

► டெனிஸ் காம்ப்டனுக்கு பிறகு சொந்த மண்ணில் அரைசதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் சாம் கர்ரான் (20 வருடம், 61 நாட்கள்) ஆவார்.

► இங்கிலாந்தில், கடந்த நான்கு டெஸ்ட் இன்னிங்சில் மூன்றில், 4 விக்கெட்களை இஷாந்த் சர்மா எடுத்துள்ளார்.

► கபில் தேவ் மற்றும் சேத்தன் சர்மாவுக்கு பின் எட்க்பாஸ்டனில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுக்கும் மூன்றாவது பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.

► 7/121 – வெளியூர் மண்ணில் அஷ்வினின் சிறந்த பந்துவீச்சு புள்ளி இதுவாகும்.

► வெளியூரில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தினார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக, இது மூன்றாவது அதிகபட்சமாகும்.

► 244 டெஸ்ட் விக்கெட்களுடன் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 7-வது இடத்தில் உள்ளார் இஷாந்த்.

► கடைசியாக வெளியூரில் விளையாடிய 7 போட்டிகளில் அனைத்து (20) விக்கெட்களையும் இந்தியா வீழ்த்தியது.

► விராட் கோலி தலைமையில் 200 விக்கெட்களை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். ஒரு கேப்டனுக்கு கீழ் அதிக விக்கெட்களை பந்துவீச்சாளர் வீழ்த்துவது இதுவே அதிகபட்சமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *