முதல் டெஸ்ட் போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து !! 1
BIRMINGHAM, ENGLAND - JULY 31: England captain Joe Root and India captain Virat Kohli hold the series trophy at Edgbaston on July 31, 2018 in Birmingham, England. (Photo by Gareth Copley/Getty Images)
முதல் டெஸ்ட் போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று துவங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து !! 2

பிர்மிஹமில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் மோஹித் சர்மா, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், முரளி விஜய், விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ் இஷாந்த் சர்மா,

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி;

அலெய்ஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், டேவிட் மாலன், பாரிஸ்டவ், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், சாம் குர்ரேன், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *