இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு !! 1
 இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் படை, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணியும், அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது.

 இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு !! 2

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள்  உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி கூறியதாவது, “இந்திய அணி முழுபலம் கொண்ட அணியாக உள்ளது. இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி சொதப்பாத பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

 இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு !! 3

இந்த தொடர் குறித்து முன்னாள் வீரர் ஜாஹிர் கான் கூறியதாவது, “இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராஹ் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான், இருந்தாலும் அவர்களது இடத்தை நிரப்ப கூடிய அளவிற்கு மற்ற வேகப்பந்து வீச்சாளர்களும் சமீப காலமாக சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக உமேஷ் யாதவ் கடந்த சில மாதங்களாகவே அபாரமாக செயல்பட்டு வருகிறார், இஷாந்த் சர்மாவின் அனுபவம் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவும், அதே போல் முகமது ஷமி இதுவரை தனது பங்களிப்பை இந்திய அணிக்கு சரியாகவே செய்து கொடுத்துள்ளார். ஆகவே, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராஹ் ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை என்றாலும் கூட இங்கிலாந்தை சமாளிக்கும் அளவிற்கான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியிடம் தற்போதும் உள்ளனர்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *