அஸ்வினுக்கு இடம் இல்லை... இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த பதினோரு வீரர்கள் களமிறங்குவதற்கு தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதோடு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க உள்ளது.

அஸ்வினுக்கு இடம் இல்லை... இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

ஜூலை 1ம் இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு இடம் அளிக்காமல் இளம் வீரர் பலருக்கு இந்திய அணி வாய்ப்பு அளித்துள்ளது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அஸ்வினுக்கு இடம் இல்லை... இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது மரண பார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தரமான ஆடும் லெவனை தான் இந்திய அணி களமிறக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, நிச்சயம் இந்த 11 வீரர்களை கொண்டு களம் இறங்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அஸ்வினுக்கு இடம் இல்லை... இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

அதில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்லும் அதனை தொடர்ந்து 3வது இடத்தில் விராட் கோலியும்,4வது இடத்தில் புஜாராவும் களமிறங்க வாய்ப்புள்ளது, இவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்டும் விளையாடுவார்கள்.

மேலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, ஷர்டுள் தாகூரும், பந்துவீச்சாளர்களாக பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது சமியும் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினுக்கு இடம் இல்லை... இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 5

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியின் பிரடிக்சன் 11….

ரோகித் சர்மா (c), சுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சமி.

 

Leave a comment

Your email address will not be published.