வேற வழியே இல்ல... விராட் கோலி இனி ஒழுங்கா விளையாடியே ஆகனும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

இந்த ஒரு காரணத்துக்காக விராட் கோலி அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று சபா கரிம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதோடு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க உள்ளது.

 

ஜூலை 1ம் இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

வேற வழியே இல்ல... விராட் கோலி இனி ஒழுங்கா விளையாடியே ஆகனும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு இடம் அளிக்காமல் இளம் வீரர் பலருக்கு இந்திய அணி வாய்ப்பு அளித்துள்ளது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, இந்த போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை ரசிகர்கள் பெரும்பாலானோர் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். அதே போன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் விளையாடத் துவங்கும் விராட் கோலி எப்படி செயல்படுவார் என்பதை பார்ப்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

வேற வழியே இல்ல... விராட் கோலி இனி ஒழுங்கா விளையாடியே ஆகனும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

கடந்த இரண்டு வருடங்களாகவே பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோலி எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்படுவதற்கான அனைத்து யோசனைகளையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் விராட் கோலிக்கு வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரிம், எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி நல்ல ரன்கள் அடிக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

வேற வழியே இல்ல... விராட் கோலி இனி ஒழுங்கா விளையாடியே ஆகனும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 4

அதில், தற்பொழுது கேப்டன்ஷிப் என்ற சுமை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தோள்பட்டையில் இருந்து இறக்கி வைக்கப் பட்டுள்ளது, இதன் காரணமாக அவரால் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் பேட்டிங் செய்ய முடியும், அவர் மட்டும் மிகவும் கவனத்துடனும் முன்னேற்பாடுகளுடனும் பேட்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டால் பந்து வீச்சாளர்கள் அவரை எப்படியாவது அவுட் செய்ய வேண்டும் என்று திணறுவார்கள். மேலும் இந்த முறை விராட் கோலி இந்திய அணிக்கு ரன்களை பெற்றுக் கொடுப்பார் என நம்புகிறேன், அவருடைய ரன்கள் நிச்சயம் இந்திய அணிக்கு தேவை என்று சபா கரீம் தெரிவித்திருந்தார்.

 

 

Leave a comment

Your email address will not be published.