பாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி... இங்கிலாந்து அணி அபார வெற்றி! 1

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது.

பாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி... இங்கிலாந்து அணி அபார வெற்றி! 2

பாக்., அணிக்கு துவக்க வீரர் மசூத் அபாரமாக ஆடி 156 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து அதிகபட்சமாக அசாம் 69 ரன்களும், சடாப் கான் 45 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு பிராட், ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்ததாக, முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு யாசிர் ஷா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி... இங்கிலாந்து அணி அபார வெற்றி! 3

107 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிப்லி மற்றும் ஜோ ரூட் இருவரும் சிறிது நேரம் களத்தில் நிலைத்து ஆடினர். பின்னர் அவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது.

பாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி... இங்கிலாந்து அணி அபார வெற்றி! 4

பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக் கனவை தகர்த்தனர். இந்த ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தது  இறுதியாக 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி முதல் போட்டியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் யாசிர் ஷா.

பாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி... இங்கிலாந்து அணி அபார வெற்றி! 5

இரண்டு இன்னிங்சிலும் தலா 2 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 84 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *