இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 12 மாதங்களுக்குப் பிறகு பென் போக்ஸ் மற்றும் ஜென்னிங்ஸ் இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பென் போக்ஸ், பேட்ஸ்மேனான ஜென்னிங்ஸ் ஆகியோர் 12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது காயம் அடைந்த ஆண்டர்சன், ஆர்சர் குறித்து பரிசீலிக்கப்படவில்லை.அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு: 12 மாதங்களுக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த வீரர் 1

இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஜோ ரூட், 2. டொமினிக் பெஸ், 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ஜோஸ் பட்லர், 5. கிராவ்லி, 6. சாம் கர்ரன், 7. ஜோ டென்லி, 8. பென் போக்ஸ், 9. ஜென்னிங்ஸ், 10, ஜேக் லீச், 11. மேத்யூ பார்கின்சன், 12. ஒல்லி போப், 13. சிப்லி, 14. பென் ஸ்டோக்ஸ், 15. கிறிஸ் வோக்ஸ், 16. மார்க் வுட்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.

அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு: 12 மாதங்களுக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த வீரர் 2
EAST LONDON, SOUTH AFRICA – FEBRUARY 12: South Africa celebrate victory in the First T20 International match between South Africa and England at Buffalo Park on February 12, 2020 in East London, South Africa. (Photo by Dan Mullan/Getty Images)

தொடக்க வீரர் பவுமா 27 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் குயின்டன் டி காக் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 26 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். ஜோர்டன் 2 விக்கெட்டும், மொய்ன் அலி, சாம் கரண், மார்க்வுட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

178 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது.

அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றிபெற்றது.



  • SHARE

    விவரம் காண

    ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

    ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

    உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

    உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

    இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

    வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

    தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

    சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

    அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...