ஐபிஎல் தொடருக்கு வந்த அடுத்த பெரும் பிரச்சனை; அனைத்து அணிகளுக்கும் பெரிய அடி !! 1

கொரோனா காரணமாக பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது சந்தேகமே என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

ஐபிஎல் தொடருக்கு வந்த அடுத்த பெரும் பிரச்சனை; அனைத்து அணிகளுக்கும் பெரிய அடி !! 2

எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால், பிசிசிஐ.,க்கு ஏறத்தாழ 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்பதால், ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் முழு முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது சந்தேகம் தான் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு வந்த அடுத்த பெரும் பிரச்சனை; அனைத்து அணிகளுக்கும் பெரிய அடி !! 3

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆஸ்லே கில்ஸ் பேசுகையில், “இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளில் இந்த வீரர்களின் பங்கேற்பு நிச்சயம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திட்டமிட்டபடி சர்வதேச தொடர் நடந்தால், அவர்கள் தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருக்கும். அதனால் 2021 சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றால், இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட அனைத்து அணிகளுக்கும் பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *