இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

சிஎஸ்கே வீரர்களால் ஏற்பட்ட குழப்பம் ! என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இங்கிலாந்து அணி ! 2

இதன் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில்  இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.  

அகமதாபாத் பிட்ச் குறித்து பேசிய விராட் கோலியை தாக்கும் முன்னாள் வீரர்கள் ! 3

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான மொயின் அலி மற்றும் சாம் கரண் சர்வதேச தொடரை விட்டுட்டு அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக ஓய்வு பெற்றிருக்கின்றனர். சிறந்த பார்ம்பில் இருந்த மொயின் அலி ஐபிஎல் தொடருக்காக வெளியேறியதால் இங்கிலாந்து அணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. தாற்போது மொயின் அலி பயோ பபுளில் இருந்து வருகிறார்.

சிஎஸ்கே வீரர்களால் ஏற்பட்ட குழப்பம் ! என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இங்கிலாந்து அணி ! 3

மறுபுறம் போப் பதிலாக சாம் கரண் நேற்றைய போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடருக்காக இந்த போட்டிகளில் விளையாடாமல் இறுதி டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார். இவர்கள் இருவரும் நேற்றைய போட்டியில் விளையாடாததால் இங்கிலாந்து அணி பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.  14ஆவது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *