தான் ஒருதலையாக காதலித்த விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த டேனியல்லா வியாட்!! 1

விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதன் முதலாக இடம் பிடித்ததற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார் டேனியல்லா வியாட்.

டேனியல்லா வியாட் விராட் கோலியின் மிகப் பெரிய அபிமானியாவார். இவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் உலககோப்பையின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி அதிரடியாக சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த அதிரடி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரது ரசிகை ஆனார் டேனியல்ல வியாட். மேலும், அவர் உராட் கொலை என்னைக் கல்யாணம் செயது கொள் ட்வீட்டரில் தூது விட்டார். அந்த அளவிற்கு கோலியின் ரசிகை ஆகியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கடந்த 32 மாதங்களாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கீழே தள்ளி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் முதலிடத்துக்குப் பின், டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடம் பெறுவது கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

தான் ஒருதலையாக காதலித்த விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த டேனியல்லா வியாட்!! 2

இதற்கு முன், சச்சின், ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், சேவாக், திலிப் வெங்சர்கர் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில்ல முதலிடத்தைப் பெற்று இருந்தாலும், தரவரிசையில் மிக அதிகபட்சமாக 934 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 149, 51 ரன்கள் என் மொத்தம் 200 ரன்கள் சேர்த்ததன் மூலம் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.தான் ஒருதலையாக காதலித்த விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த டேனியல்லா வியாட்!! 3

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இதுவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு 32 மாதங்களாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். அதைக் கோலி முறியடித்து, 934 புள்ளிகளுடன் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *