JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

டெஸ்ட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் துவங்கும் – கிரிக்கெட் வாரியம் கொடுத்த ட்ரீட்!

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம்.

உலகெங்கும் அதிவேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறாததால் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

LONDON, ENGLAND - SEPTEMBER 15: Joe Root of England celebrates victory during day four of the 5th Specsavers Ashes Test between England and Australia at The Kia Oval on September 15, 2019 in London, England. (Photo by Ryan Pierse/Getty Images)

இந்நிலையில் ஆங்காங்கே மெதுவாக கொரோனா பரவல் விகிதம் குறைந்து வருகிறது. இதனால் சில நாடுகளில் கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை பயிற்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு பயிற்சி தொடங்கியது. முதல் கட்டமாக வீரர்கள் அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்தபிறகே பயிற்சியை அனுமதித்திருக்கிறது.

மேலும், இரண்டு மாத காலமாக கிரிக்கெட் போட்டியினை காணாமல் இருந்த ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி உடனான டெஸ்ட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.

டெஸ்ட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் துவங்கும் - கிரிக்கெட் வாரியம் கொடுத்த ட்ரீட்! 1

மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது ஜூலை எட்டாம் தேதி துவங்குகி ஜூலை 28ம் தேதி வரை நடைபெறும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த தொடரில் பங்கேற்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் வருகிற ஜூன் 9ம் தேதிக்குள் இங்கிலாந்து வந்தடைய வேண்டும். அவர்களுக்கு உடல்நிலையை பரிசோதனை நடைபெற்று, பிறகு தொடர்ந்து 3 வாரங்கள் ஒருவரோடு ஒருவர் பழகாமல் தனிமைப்படுத்தி பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்பு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற பட்சத்தில் மட்டுமே அவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க இயலும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெஸ்ட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் துவங்கும் - கிரிக்கெட் வாரியம் கொடுத்த ட்ரீட்! 2

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான அட்டவணை:

  1. முதல் டெஸ்ட் – ஜூலை 8 முதல் 12 வரை – ஏஜஸ் பவுல் மைதானம்
  2. இரண்டாவது டெஸ்ட் – ஜூலை 16 முதல் 20 வரை – ஓல்ட் ட்ரபோடு மைதானம்
  3. மூன்றாவது டெஸ்ட் – ஜூலை 24 முதல் 28 வரை – ஓல்ட் ட்ரபோடு மைதானம்



  • SHARE
  • விவரம் காண

    பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...