நாளைய போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அறிவிப்பு!! 1

இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

2-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை). 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் விளையாடும்போது லார்ட்ஸ் மைதானத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் லார்ட்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கிலாந்து v இந்தியா: குறிப்பேடுகள் முதல் டெஸ்ட் - நாள் மூன்று

தற்போது இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படும். அத்துடன் லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரண்டு அணிகளும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயன் மோர்கன் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் மைதானம் மிகவும் அற்புதமானது. ஈரப்பதம் மட்டுமல்ல, ஆடுகளம் சதுர வடிவில் இருக்கும். இது எப்போதுமே கடினமான விஷயம். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் போன்றுதான் லார்ட்ஸ் செயலாற்றும் என நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மிகப்பெரிய பங்காற்றும்.இங்கிலாந்து v இந்தியா: குறிப்பேடுகள் முதல் டெஸ்ட் - நாள் நான்கு

இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க ஆலோசனைகள் செய்யும். இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்காவிடில், அது அனைவருக்குமே ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.

இங்கிலாந்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் 58 முறை சந்தித்திருக்கின்றன. இவற்றில், 31 முறைகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, இந்தியா 6 போட்டிகளிலும், 21 போட்டிகளிலும் டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து அணி:

ஸ்டூவர்ட் பிராட், ஆலி போப், பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான், கிறிஸ் வோக்ஸ், அட்வில் ரஷிட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், மோயீன் அலி

2 வது டெஸ்ட் இந்தியாவின் சாத்தியமான லெவன்: முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராத் கோஹ்லி , ரஹானே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டிய, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.நாளைய போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அறிவிப்பு!! 2

புள்ளிவிவரங்கள்

6 –  ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் 550 விக்கெட்டுகளை விட 6 விக்கெட்டுகள் குறைவாக உள்ளார்

6 –  இஷாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் 250 விக்கெட்டுகளை முடிக்க 6 விக்கெட்டுகள் கூடுதல் தேவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுக்கும் 7 வது இந்திய வீரராக இஷாந்த் விளங்குகிறார். 

12 –  ஸ்டூவர்ட் பிராட் 3000 டெஸ்ட் ரன்கள் சாதனையை அடைய 12 இன்னும் ரன்கள் தேவை. டெஸ்ட் போட்டியில் 3000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை வென்ற பிராட் ஒரே 5 வது வீரராக மாறுவார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *