இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 348 ரன்களை குவித்து 3 விக்கெட்டுகள் மட்டுமே விட்டுக்கொடுத்தது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக அலைஸ்டர் குக்கும் அறிமுக வீரர் மார்க் ஸ்டோன்மேனும் களம் இறங்கினர். இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியாகவும். மேலும் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அபாரமாக ஆடிய முன்னாள் கேப்டன் குக் 153 ரன்கள் குவித்தார். இவருடைய இந்த ஆட்டத்தில் 23 போர்கள் அடித்திருந்தார். அடுத்து வந்த இந்நாள் கேப்டன் ஜோ ரூட்டும் சதம் விளாசினார் அவர் 136 ரன்கள் அடித்தார் இதில் 22 போர்கள் அடங்கும்.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 348 ரன்கள் குவித்தது குக் 153 ரன்களுடனும் டேவிட் மலன் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டுமே க்ளீன் போல்டு ஆகும்.