தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு யார் காரணம்...? இயான் மோர்கன் ஓபன் டாக் !! 1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியதற்கான உண்மை காரணம் என்ன என்பதை புதிய கேப்டன் இயான் மோர்கனே வெளியிட்டுள்ளார்.

இதுவரை இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, கடந்த வருடத்தில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வழிநடத்தி வருகிறார்.

பேட் கம்மின்ஸ், இயான் மோர்கன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் இருந்த போதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த தொடரில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு யார் காரணம்...? இயான் மோர்கன் ஓபன் டாக் !! 2

ஒவ்வொரு போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திணறியதால், தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கிரிக்கெட் வலுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென இன்று மதியம் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் தானாக விலகிவிட்டதாகவும், புதிய கேப்டனாக இயன் மோர்கன் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு சரியானது என்று சிலரும், தினேஷ் கார்த்திக்கை அணி நிர்வாகம் நிர்பந்தித்து கேப்டன் பதவியில் இருந்து விலக சொல்லி இருக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து புதிய கேப்டனான இயான் மோர்கனே தெளிவுபடுத்தியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு யார் காரணம்...? இயான் மோர்கன் ஓபன் டாக் !! 3

இது குறித்து இயன் மோர்கன் பேசுகையில், “தினேஷ் கார்த்திக் திடீரென நேற்று வந்து தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாக கூறினார், சிறிதும் சுயநலம் இல்லாத தினேஷ் கார்த்திக்கின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியாக இருந்தது. அணியின் நலம் கருதியே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதால் நான் விளையாடும் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கேப்டன் பதவியை ஏற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.