மூன்றாவது டெஸ்ட் போட்டி.. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிதான துவக்கம் !! 1
மூன்றாவது டெஸ்ட் போட்டி.. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிதான துவக்கம்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 49 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி 1 விக்கெட்டை இழந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்கில் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி.. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிதான துவக்கம் !! 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு,  கேப்டன் கோஹ்லி 54 ரன்களூம், புஜாரா 50 ரன்களும், புவனேஷ்வர் குமார் 30 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி.. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிதான துவக்கம் !! 3

இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தென் ஆப்ரிக்கா அணியின் மற்றொரு துவக்க வீரர் எல்கரை, புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். அடுத்ததாக ரபடா 84 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தென் ஆப்ரிக்கா அணிக்காக நீண்ட நேரம் தனி ஒருவனாக போராடிய ஹசீம் ஆம்லா (61) உள்பட அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களை இந்திய அணியின் பும்ராஹ் சீரான இடைவேளையில் விக்கெட்டை எடுத்து வெளியேற்றினார்.

இதன் மூலம் 194 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ராஹ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி.. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிதான துவக்கம் !! 4

இதனையடுத்து 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்த பார்தீவ் பட்டேல் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் – முரளி விஜய் ஜோடி நிதானமாக விளையாடி வருவதன் மூலம் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 49 ரன்கள் எடுத்து 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கே.எல் ராகுல் 16 ரன்களுடனும், முரளி விஜய் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *