சேப்பாக்கம் ஆடுகளத்தை விமர்ச்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோஹித் சர்மா பேசிய கருத்திற்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றதால், இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டி வெல்வதே மிக கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.

ரோஹித் சர்மா சொன்னதுல எந்த தப்பும் இல்ல; ஜோ ரூட் பெருந்தன்மை !! 2

இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெற்ற அதே சேப்பாக்கம் மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெற்றதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் வீரர்கள் பலரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இந்திய அணி,இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.

இந்த தொடர் துவங்கும் முன், இந்திய அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாது என கணித்திருந்த முன்னாள் வீரர்கள் பலர், தங்களது கணிப்பை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டாவது போட்டி நடைபெற்ற பிட்சின் மீது பழியை போட்டனர். இரண்டாவது போட்டி நடைபெற்ற பிட்ச் முழுக்க முழுக்க இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்றும் மைக்கெல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரோஹித் சர்மா சொன்னதுல எந்த தப்பும் இல்ல; ஜோ ரூட் பெருந்தன்மை !! 3

ஆடுகளம் குறித்தான விமர்ச்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்த இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, சொந்த நாட்டில் விளையாடும் போது அந்த அணிக்கு சாதகமான விசயம் இருக்கத்தான் செய்யும், இதை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட்டும், ரோஹித் சர்மாவின் இந்த கருத்தை வழி மொழிந்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள ஜோ ரூட், “நிச்சயமாக சொந்த மண்ணில் விளையாடுவது அந்ததந்த அணிகளுக்கு சாதகமான விசயமாக இருக்கும். இது இயல்பான விசயம் தான். ஒவ்வொரு ஆடுகளமும் வித்தியாசமாக அமைக்கப்படுவதே டெஸ்ட் போட்டிகளுக்கான சிறப்பம்சமாக நான் உணர்கிறேன். இது அனைத்து இடங்களிலும் நடக்க கூடிய விசயம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *