முன்னாடியே இவர எடுத்திருந்தா உலகக்கோப்பையே கிடைச்சிருக்கும்...5 வருசத்த வீணடிச்சிட்டீங்க; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 1
முன்னாடியே இவர எடுத்திருந்தா உலகக்கோப்பையே கிடைச்சிருக்கும்…5 வருசத்த வீணடிச்சிட்டீங்க; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர்

சூர்யகுமார் யாதவை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

சூர்யகுமார் யாதவ்

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பாரபட்சமே பார்க்காமல் பந்தாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சில ஷாட்களை இதுவரை தான் பார்த்ததே இல்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் ஓபனாக பேசும் அளவிற்கு தரமான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினார்.

முன்னாடியே இவர எடுத்திருந்தா உலகக்கோப்பையே கிடைச்சிருக்கும்...5 வருசத்த வீணடிச்சிட்டீங்க; இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 2

எதிரணி வீரர்கள் கூட சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை வியந்து பாராட்டி வரும் நிலையில், சூர்யகுமார் யாதவை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “இந்திய அணியின் தேர்வுக்குழு சூர்யகுமார் யாதவின் திறமையை கடந்த 5 வருடமாக வீணடித்துவிட்டது என்பதே உண்மை. அவருக்கு தாமதமாகவே இடம் கிடைத்துள்ளது, இருந்த போதிலும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை மிக மிக சரியாக செய்து கொடுத்து வருகிறார். சமகால கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் வீரராக சூர்யகுமார் யாதவே திகழ்ந்து வருகிறார். அவருக்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே இடம் கிடைத்திருந்தால் நிச்சயம் இந்திய அணியில் நீண்ட காலமாக நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனை எப்பொழுதோ சரியாகியிருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.