மும்பை இந்தியன்ஸ் அணியில் இவருக்கு மட்டுமே உறுதி ; மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் ! 1

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரண் மோர் தான் கடைசி, மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என அறிவிப்பு !

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இவருக்கு மட்டுமே உறுதி ; மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் ! 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது. மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.  ஆனால் இந்தாண்டு  ஐபிஎல் சீசனை இந்தியாவிலே நடத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தனர்.  ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு வீரர்களை தாக்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இவருக்கு மட்டுமே உறுதி ; மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் ! 3

தற்போது வரை நான்கு வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லி கேப்பிடல் அணியின் அக்ஷர் பட்டேல், கொல்கத்தா அணியின் நித்திஷ் ராணா மற்றும் ஆர்சிபி வீரர்கள் படிக்கல், டேனியல் சாம்ஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இவர்களை தனிமைப்படுத்தப்பட்ட இருக்கின்றனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கவுட் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆலோசகராக செயல்பட்டு வரும் கிரண் மோருக்கும் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இவருக்கு மட்டுமே உறுதி ; மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் ! 4

இதனால்  வலைப்பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றனர். மேலும் மற்ற வீரர்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக கூறியிருந்தனர். தற்போது இதற்கான முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. கிரண் மோர் தவிர மற்ற எந்த வீரர்களுக்கும் கொரானா பாதிப்பு இல்லை என்று அறிவித்து இருக்கின்றனர். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *