5 ஸ்டார் ஹோட்டல் தோனி

0
637

5 ஸ்டார் ஹோட்டல் தோனி

தோனி தற்போது அவரது சொந்த ஊரான ராஞ்சியில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை நிறுவ உள்ளதாக செய்திகள் வருகின்றன. ஜீ செய்திகள் நமக்கு அளித்த செய்தியின் மூலம் தெரிந்தது இது. இந்த ஹோட்டலின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்கள் ஆகும். ரித்தி ட்ராவல்ஸ் & டிக்கெட்டிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிருவனத்துடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.indha 5 ஸ்டார் ஹோட்டல் தோனி அந்த நிருவனம் ஹோட்டலில் 500 பணியாளர்களை பணியமர்த்த உள்ளது.

ஓய்விற்க்குப் பிறகு அவர் இது போன்ற வணிக வேலையாக தான் தன்னை பிசியாக வைத்துகொள்ளப் போகிறார் எனத் தெரிகிறது. இது தோனிக்கு புதிதல்ல இத்ற்க்கு முன்னர் இந்திய கால்பந்து லீக்கில் சென்னையின் எப்.சி என்ற அணியின் பங்குதாரர் ஆவார்.

மேலும், இந்தியா ஹாக்கி லிக்கில் அவரது சொந்த ஊரான ராஞ்சியை மையமாக வைத்து ஒரு அணியையும் தனது சொந்தமாக வைத்துள்ளார். அதற்க்கு மேலும் தோனி ஒரு பைக் ரேசிங் டீம் ஒன்றையும் வைத்துள்ளார். அதன் பெயர் மகி ரேசிங் டீம்.அந்த அணி 2012ல் தோனியின் பெயரில் இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தோனி துபாயில் ,துபாய் பசிபிக் ஸ்போர்ட்ஸ் க்ளப்புடன் சேர்ந்து அங்கு ஒரு கிரிக்கெட் அகாடமியை ஆரம்பித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் செவன் என்ற க்ளோத்திங் பிராண்டையும் வைத்துள்ளார்.

தற்போது இலங்கையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறார் தோனி.

இந்திய இலங்கை இடையேயான இரண்டாவது போட்டியில் ஹீரோயிசம் செய்து இந்தியாவை அழகாக வெற்றிப்பதைக்கு அழைத்துச் சென்றவர் புவனேஷ்வர் குமார்.237 என்ற எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி மிக எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதற்க்குப் பின்னர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மூன்றே ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்த இந்திய அணி 131 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து மிகவும் தடுமாறியது.

பின்னர் ஒரு புறம் தோனி ஒற்றை இலக்க ரன்னில் இருக்க அவருடன் வந்து ஜோடி சேர்ந்தார் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இருவரும் மிக பொருமையாக ஆடி இந்திய அணியை 3 விக்கெட் வித்யாசத்தில் கரை சேர்த்தனர். இறுதியாக 80 பந்தில் 53 ரன் எடுத்தார் புவனேஷ்வ்ர குமார். தோனி 68 பந்துகளில் 45 ரன் அடித்தருந்தார். இதில் புவனேஷ்வர் குமாரின் ஸ்ட்ரைக் ரேட் 66.25 ஆகும்.

ஆட்ட முடிவிற்க்குப் பின் பரிசளிப்பு விழாவில் புவனேஷ்வர் குமார் தோனி தான் என்னுடைய இந்த மாதிரியான ஆட்டத்திற்க்கு வழிவகுத்தார் என அவரை புகழ்ந்தார்.

மேலும், இலங்கை கேப்டன் உபுல் தரங்காவிற்க்கு அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகள் ஆட தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை தாமதமாக ஓவர் வீச பணித்ததற்காக அவர் அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஸ் சண்டிமால் அழைக்கப்பட்டுள்ளார். மேலும் லகிரு திரிமான்னேவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

SHARE