இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கருத்தை தென் ஆப்ரிக்கா அணியின் டூபிளசிஸ் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை ஆறு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதே போல் விண்டீஸ் அணி 2 முறையும், பாகிஸ்தா, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எல்லாம் ஓரமா போங்க; டி.20 உலகக்கோப்பை இந்த அணிகளுக்கு தான்; டூபிளசிஸ் உறுதி !! 2

கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வைத்து நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு அணிக்கு கனவாக இருக்கும் உலகக்கோப்பையை வெல்வதற்கு தேவையான முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் இந்நாள் வீரர்கள் சிலர் இந்த வருட உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எல்லாம் ஓரமா போங்க; டி.20 உலகக்கோப்பை இந்த அணிகளுக்கு தான்; டூபிளசிஸ் உறுதி !! 3

அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை குறித்து பேசியுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் டூபிளசிஸ், இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் தற்போதைய டி.20 சாம்பியனான விண்டீஸ் அணிக்கும், முன்னாள் சாம்பியனான இந்திய அணிக்குமே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கருதுகிறேன். டி.20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி விளையாடும் என்பது நாம் அறிந்ததே. டி.20 போட்டிகளில் அதிக அனுபவம் உள்ள பல வீரர்கள் அணியில் உள்ளது விண்டீஸ் அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எல்லாம் ஓரமா போங்க; டி.20 உலகக்கோப்பை இந்த அணிகளுக்கு தான்; டூபிளசிஸ் உறுதி !! 4

மேலும் பேசிய டூபிளசிஸ், “விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வருகிறது. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டிற்குமே இந்திய அணியிடம் மிக சிறந்த வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்து அணியும் சமீபகாலமாக மிக சிறப்பாக விளையாடி வந்தாலும், என்னை பொறுத்தவரையில் இந்திய மற்றும் விண்டீஸ் அணிகளுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *