தென் ஆப்பிரிக்கா அணி பற்றிய கோலியின் கருத்துக்கு டுபிளெசிஸ் பதிலடி 1

செஞ்சூரியன் மைதானத்தில் தோல்வி தழுவி தொடரை இழந்த பிறகு பொறிபறக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது நிதானமிழந்து தென் ஆப்பிரிக்க அணியின் இந்தியப் பயணம் குறித்த கருத்தைத் தெரிவிக்க அதற்கு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா எவ்வளவு போட்டிகளில் இந்தியாவில் வெற்றிக்கு அருகில் வந்துள்ளனர் என்று கோலி கூறும்போது பின்னறையில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் இருந்தார்.தென் ஆப்பிரிக்கா அணி பற்றிய கோலியின் கருத்துக்கு டுபிளெசிஸ் பதிலடி 2

கோலிக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் கூறியது:

உள்நாடு அல்லாத வெளிநாடுகளில் எங்கள் வெற்றி விகிதம் உலகிலேயே சிறந்தது, ஏனெனில் நாங்கள் சீரியசாகவே சிறப்பான கிரிக்கெட்டை ஆடியுள்ளோம். ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் சில வேளைகளில் தீவிரமாக உள்ளது. நான் இப்படிப் பார்க்கிறேன், இந்திய அணியின் ஸ்பின்னர்கள் எங்கள் ஸ்பின்னர்களை விட அபாரமாகத் திகழ்ந்த சூழ்நிலையில் கூட இந்திய பேட்ஸ்மென்கள் திணறியுள்ளனர். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே 3 நாட்களில் முடிந்தது. ஒரேயொரு சதம் மட்டுமே என்று நினைக்கிறேன். (டெல்லியில் அஜிங்கிய ரஹானே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார்).

தென் ஆப்பிரிக்கா அணி பற்றிய கோலியின் கருத்துக்கு டுபிளெசிஸ் பதிலடி 3
South Africa’s captain Faf du Plessis (L) reacts after England’s James Anderson lost his wicket, ending England’s innings, on day 4 of the fourth Test match between England and South Africa at Old Trafford cricket ground in Manchester on August 7, 2017. / AFP PHOTO / Oli SCARFF / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read OLI SCARFF/AFP/Getty Images)

இந்தத் தொடரில் கடினமான சில தருணங்கள் இருந்தன, ஆனால் வீரர்கள் ரன்கள் எடுத்தனர், விக்கெட்டுகள் விழுந்தன. எனவே பந்துக்கும் பேட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இப்படியிருந்தாலே அது நல்ல பிட்ச். ஆனால் பிட்ச் ஸ்விங் பந்துகளுக்கு மட்டுமே, அல்லது ஸ்பின் பந்துகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்து பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்தினால் அப்படிப்பட்ட பிட்ச்கள் அதீதமானவை என்று கூறலாம். 5 நாட்களோ. நான்கு நாட்களோ, கிரிக்கெட்டின் அனைத்து காரணிகளும் நமக்கு கிடைத்தால் அது நல்லது. நியூலேண்ட்சில் முதல் நாள் காலை கடினமாக இருந்தது பிறகு எளிதானது கடைசியில் கடினமானது. பந்துக்கும் மட்டைக்கும் கடும் போட்டி நிலவ வேண்டும், அதில் வெற்றி பெற போராட வேண்டும்.

கடந்த இந்தியத் தொடரிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம், அடுத்த முறை அங்கு ஆடும்போது நாங்கள் கடந்த முறையை விட நல்ல போட்டியளிப்போம்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

Leave a comment

Your email address will not be published.